சென்னையில் மூதாட்டியை தாக்கி 2 பவுன் நகை பறிப்பு


சென்னையில் மூதாட்டியை தாக்கி 2 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2025 2:15 AM IST (Updated: 16 Jun 2025 2:15 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.

சென்னை,

சென்னை அண்ணா நகர், 'ஒய்' பிளாக் 5-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 73). நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், ஜெயலட்சுமி கழுத்தில் கிடந்த தங்்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கூச்சலிட்டதால் அவரை தாக்கி, கீழே தள்ளிவிட்டு 2 பவுன் சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.

இதில் காயம் அடைந்த மூதாட்டியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த அண்ணா நகர் போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story