திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் - டிடிவி தினகரன்

வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்தப்போவது உறுதி என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது;
அகில இந்திய அளவில் தலைமை தாங்குவது பாஜக. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் சந்திக்கும் என உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். அவர் சொன்னபடி தான் தமிழ்நாட்டில் கூட்டணி அமைந்திருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் பலமடைந்து வருவதில் மகிழ்ச்சி. திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறார்களோ அந்த கட்சி எல்லாம் எங்கள் கூட்டணியில் சேர வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அதற்கு நாங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்கிறோம். வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்தப்போவது உறுதி.
அதன் காரணமாக திமுக அமைச்சர் உட்பட அனைவரும் பயத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர். பாஜக அதிமுக கூட்டணி குறித்து விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், இவர்கள் 1999 , 2004 வரைக்கும் கூட்டணி இருந்தவர்கள் தான். எங்களுக்குள் உள்ள பங்காளி சண்டையை ஒதுக்கி வைத்துவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு முழுதும் பாடுபடுவோம்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.