திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் தயாராகி விட்டார்கள்: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்


திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட  மக்கள்   தயாராகி விட்டார்கள்: எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
x

2026 தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அம்பை,

தமிழகத்தில் 2026இல் திமுக ஆட்சி அகற்றப்படும்.அம்பாசமுத்திரத்தில் பூக்கடை சந்திப்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது

கூட்டணி பலத்தை நம்பிக் கொண்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். மக்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியை பார்க்கும் போது 2026-ல் அதிமுக ஆட்சி அமைவது உறுதி. திமுக ஆட்சியின் கடந்த 50 மாதங்களில் எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. திமுக அரசின் திட்டங்கள் விளம்பரத் திட்டங்களாக உள்ளன. அதிமுக ஆட்சியில் கிராமம், நகரம் வரை திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் பொம்மை ஆட்சி நடக்கிறது. விவசாயிகள், மக்களின் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அதிமுக ஆட்சி மலர வேண்டும். 2016 -2021 அதிமுக ஆட்சியில் 2 முறை பயிர்க்கடன் தள்ளுபடிசெய்யப்பட்டது. குடிமராமத்து பணிகள் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி தெரியாது.

2026 தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதிமுகவை விமர்சிக்க திமுகவுக்கு தகுதியில்லை. திமுக ஆட்சிக்கு மக்கள் முடிவுகட்ட தயாராகி விட்டார்கள். இன்னும் 7 மாதங்கள்தான் உள்ளன. திமுக ஆட்சிக்கு வென்டிலேட்டர் (ஆக்ஸிஜன்) பொருத்தப்பட்டு விட்டது. 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை மக்கள் வெற்றிபெற செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story