வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி பா.ம.க. இன்று போராட்டம்


வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி பா.ம.க. இன்று போராட்டம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 20 July 2025 4:10 AM IST (Updated: 20 July 2025 5:57 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடக்கிறது.

சென்னை,

பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டு 1,200 நாட்களுக்கு மேலாகியும் இன்று வரை இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், உடனடியாக வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் 20-ந் தேதி (இன்று) காலை 11 மணிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெற உள்ளது. பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இந்தப் போராட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்ற இருக்கிறார்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story