விரைவில் பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில் சேவை


விரைவில் பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரெயில்  சேவை
x

மின்சாரம், காற்றழுத்தம், அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்றவற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.இதனால் தினமும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், விரைவில் பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. பூந்தமல்லி - போரூர் வரை, மெட்ரோ ரெயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கான சோதனைகள் நிறைவு பெற்றுள்ளன .

மெட்ரோ ரெயில் பெட்டிகள் மற்றும் தண்டவாளத்தின் தரம் மதிப்பீடு செய்யப்பட்டது. மின்சாரம், காற்றழுத்தம், அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது.

ஆகஸ்டு 16ம் தேதி தொடங்கிய சோதனைகளில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட தேதிக்கு முன்னதாகவே மெட்ரோ ரயில் சோதனைகள் நிறைவடைந்துள்ளது

1 More update

Next Story