சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க சட்டசபைக்கே சொந்தம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க சட்டசபைக்கே சொந்தம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 16 Oct 2025 7:33 PM IST (Updated: 16 Oct 2025 7:38 PM IST)
t-max-icont-min-icon

கவர்னருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது.

சென்னை,

தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப் பட்ட சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு கவர்னர் அனுமதி கொடுக்காமல் இருந்தார்.இந்த நிலையில் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக் கழக சட்ட மசோதாவை இன்று மீண்டும் தாக்கல் செய்ய தமிழக அரசு ஏற் பாடு செய்திருந்தது.இந்த நிலையில் இந்த சட்ட முன்வடிவு சட்டசபை யில் ஆய்வு செய்வதற்கு கவர்னரின் பரிந்துரையை பெற வேண்டும் என்பதால் அவருக்கு அது அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் அதில் கவர்னர் சில கருத்துக்களை தெரி வித்து இருந்தார். ஆனால் கவர்னருக்கு கருத்து தெரி விக்க அதிகாரம் இல்லை என்று அரசு கருதியது. இதைத் தொடர்ந்து இன்று சட்டசபையில் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். முன்னதாக சட்ட சபையில் தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்ய அனுமதி கோரப்பட்ட நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது,

சட்டம் இயற்றுவது, இப்பேரவைக்கு மட்டுமே உள்ள அதிகாரம். ஆகவே, கவர்னரிடம் இருந்து வரப்பெற்றுள்ள அந்தக் கருத்துகள் அடங்கிய செய்தி அவைக் குறிப்பில் இடம் பெறுவதை மாநில சுயாட்சி யில் நம்பிக்கை கொண்ட எந்த ஓர் உறுப்பினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார் கள் என்கிற காரணத்தால், அந்தக் கருத்துகளை நான் இங்கே பதிவுசெய்ய விரும்ப வில்லை” என்று பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து கவர் னருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. இந்த நிலையில், முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

சட்டம் இயற்றும் அதிகாரம் முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கே சொந்தம்! தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு தொடர்பாக ஆளுநர் அனுப்பியுள்ள செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பேரவையின் மாண்பைக் குறைக்ககூடிய வார்த்தை அடங்கிய பகுதிகளைத் தமிழ்நாடு சட்டப்பேரவை நிராகரித்தது” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story