ஒவ்வொருவரின் தேசப்பொறுப்பையும் மீண்டும் படரச் செய்துள்ளார் பிரதமர் மோடி: நயினார் நாகேந்திரன்


ஒவ்வொருவரின்  தேசப்பொறுப்பையும் மீண்டும் படரச் செய்துள்ளார் பிரதமர் மோடி: நயினார் நாகேந்திரன்
x

பாரதத்தை ஒற்றுமையுடன் உருவாக்குவதற்குத் மனதின் குரல் நிகழ்ச்சி தூண்டுகோலாக விளங்கிக் கொண்டிருக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பிரதமர் மோடி அவர்களின் இன்றைய மனதின் குரல் அத்தியாயம், நமது பாரதத்தின் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் பெருமை ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஓர் அற்புத நிகழ்வாக இருந்தது. நம் க்ஷ பாரதத்தை வரையறுக்கும் இயற்கை, கலாச்சாரம் குறித்தும், பல்வேறு இந்திய சமூகங்களுக்கு இடையிலான ஆழமான பிணைப்பு குறித்தும் நமக்கு அழகாக நினைவூட்டிய நமது பிரதமர் அவர்கள், நமது பாரதப் பெண்கள் சூரியனைப் போற்றும் சாத் விரதத்தை பக்தியுடன் கடைப்பிடிப்பது குறித்தும் சிலாகித்துக் கூறியது உண்மையிலேயே உணர்ச்சி மிகுந்த தருணம்.

சத்தீஷ்கர் மாநிலம் அம்பிகாபூரின் தூய்மைப் பணிகள், கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் நீர் பாதுகாப்பு மற்றும் குஜராத் மாநிலத்தின் சதுப்பு நிலப் பாதுகாப்பு குறித்த நமது மாண்புமிகு பிரதமரின் சிந்தனைகளும் கருத்துகளும், நம் தேசத்தின் மீதான அவரது பாசத்தையும் இயற்கையின் மீதான நேசத்தையும் கோடிட்டுக் காட்டுகின்றன.

அரும்பெரும் தேசத் தலைவர்களான சர்தார் படேல், பிர்சா முண்டா மற்றும் கோமரம் பீம் ஆகியோருக்கான புகழஞ்சலிகளைச் செலுத்திவிட்டு, “இந்தியாவில் தயாரிப்போம்" என்பது வெறும் பொருளாதார முயற்சி மட்டுமல்ல, நமது மண்ணின் பெருமையில் வேரூன்றிய ஒரு கலாச்சார மறுமலர்ச்சி என்பதையும் சுட்டிக்காட்டியதன் மூலம், ஒவ்வொரு பாரதக் குடிமகனின் மனதிலும் தேசப்பற்றையும், தேசப்பொறுப்பையும் மீண்டும் படரச் செய்துள்ளார் நமது பிரதமர் அவர்கள்.

வளமான, தன்னம்பிக்கை மிகுந்த ஒரு பாரதத்தை ஒற்றுமையுடன் உருவாக்குவதற்குத் தூண்டுகோலாக விளங்கிக் கொண்டிருக்கும் மனதின் குரல் நிகழ்ச்சியும் அதைச் சிறப்புடன் வழிநடத்தும் நமது பிரதமரும், கடவுள் நமக்களித்த வாழ்நாள் பரிசு என்பதில் எவ்வித ஐயமுமில்லை.என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story