பிரதமர் வருகை - கோவை விமான நிலையத்தில் கட்டுப்பாடு


பிரதமர் வருகை - கோவை விமான நிலையத்தில் கட்டுப்பாடு
x

கோவையில் 19ம் தேதி நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

கோவை,

கோவை மாவட்டம் கொடிசியாவில் வருகிற 19ம் தேதி விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிலையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு, கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, 18ம் தேதி காலை 6 முதல் 19ம் தேதி மாலை 6 மணி வரை, டெர்மினல் முன்பகுதி மற்றும் ஒய் - ஜங்ஷன் பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணத்திற்காக விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story