பிரதமரின் மணிப்பூர் பயணம் குறித்து பிரியங்கா விமர்சனம்


பிரதமரின் மணிப்பூர் பயணம் குறித்து பிரியங்கா விமர்சனம்
x
தினத்தந்தி 14 Sept 2025 1:37 AM IST (Updated: 14 Sept 2025 1:44 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மணிப்பூருக்குச் செல்வது மகிழ்ச்சி. ஆனால் இதை அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறினார்.

வயநாடு,

காங்கிரஸ் பொதுச்செயலாளரும், கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான பிரியங்கா, தனது சொந்த தொகுதிக்கு வந்திருந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-நாட்டில் எந்த பகுதியில் மக்களுக்கு துன்பம் நேர்ந்தாலும்,

அந்த பகுதிக்கு பிரதமர் சென்று அந்த மக்களுக்கு ஆறுதல் கூறுவது வழக்கம். ஆனால் மணிப்பூரில் கலவரம் நடந்து 2 ஆண்டுகள் பிரதமர் மோடி அங்கு செல்லவே இல்லை.இப்போது பிரதமர் மணிப்பூருக்குச் செல்வது மகிழ்ச்சி. ஆனால் இதை அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். மணிப்பூரில் நடந்த சம்பவங்களும், பலர் உயிரிழந்ததும் துரதிருஷ்டவசமானது.இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story