தவெக தலைவர் விஜய்-ஐ சந்தித்த தூய்மை பணியாளர்கள்


தவெக தலைவர் விஜய்-ஐ சந்தித்த தூய்மை பணியாளர்கள்
x

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது

சென்னை

சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மை பணியை தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் வழங்கியதைக் கண்டித்து உழைப்பவா் உரிமை இயக்கம் சாா்பில் அந்த மண்டலங்களின் தூய்மை பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணி நிரந்தரம், பணிப்பாதுகாப்பு, ஊதிய நிா்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு 11- வது நாளாக தொடா் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் அமைச்சா்கள் கே.என்.நேரு, சேகா்பாபு , மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்துள்ளது. இதனால், தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் இன்று தவெக தலைவர் விஜய்-ஐ சந்தித்தனர். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்களின் குழுவினர் தவெக தலைவர் விஜய்-ஐ சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story