நாட்டின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமை: கனிமொழி


நாட்டின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமை:  கனிமொழி
x
தினத்தந்தி 17 May 2025 5:22 PM IST (Updated: 17 May 2025 5:54 PM IST)
t-max-icont-min-icon

7 குழுக்களும் விரைவில் சர்வதேச சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க, காங்கிரசின் சசி தரூர், பாஜகவின் ரவிசங்கர், திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சூலே உள்ளிட்டோர் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 7 குழுக்களும் விரைவில் சர்வதேச சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து தி.மு.க. எம்.பி., கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நமது நாட்டின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமைப்படுகிறேன்.நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளை காக்கும் வகையில் திமுக எப்போதும் பாடுபடும்.ஒத்துழைப்பு நல்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொறுப்பு தந்த பிரதமர் மோடி, அமைச்ர் உள்ளிட்டோருக்கு நன்றி.நாட்டின் நலனை பொறுத்தவரை நாங்கள் ஒற்றுமையாக, உறுதியாக, தெளிவாக, அசைக்க முடியாதவர்களாக நிற்கிறோம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 More update

Next Story