கல்குவாரி விபத்து: விதிகள் மீறப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை -ராமதாஸ்


கல்குவாரி விபத்து: விதிகள் மீறப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை -ராமதாஸ்
x

கல்குவாரியில் பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சிவகங்கை மாவட்டம் மல்லாங்கோட்டை பகுதியில் உள்ள கல்குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி , அங்கு பணி செய்து கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்குவாரியில் பாதுகாப்பு விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டிருந்தால், இந்த உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடியும். ஆனால், விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாததால் தான் 6 அப்பாவிகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி, விதிகள் மீறப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் நிவாரண உதவி வழங்க வேண்டும்.என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story