மழை வெள்ளம் ஆய்வு: குழந்தைக்கு 'மலர்' என பெயர் சூட்டிய கனிமொழி எம்.பி.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ள இடங்களை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
மழை வெள்ளம் ஆய்வு: குழந்தைக்கு 'மலர்' என பெயர் சூட்டிய கனிமொழி எம்.பி.
Published on

தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுடலையாபுரம், மாதாநகர், ராஜபாளையம், தாளமுத்துநகர், பூபாண்டிபுரம், மாப்பிள்ளையூரணி ஆகிய பகுதிகளை தி.மு.க. துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. வெள்ளநீர் தேங்கியுள்ள இடங்களை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

மேலும் மோட்டார் பம்புகள் மூலம் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் குறித்தும், சாலைகளை சீரமைக்கும் பணிகள் குறித்தும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி, ராஜபாளையத்தில், வெள்ள நிலையை ஆய்வு செய்ய சென்ற இடத்தில் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, குழந்தைக்கு மலர் என்ற பெயரை கனிமொழி எம்.பி. சூட்டினார்.

இந்த ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, வட்டார வளர்ச்சி அலுவலா பானு, உதவி செயற்பொறியாளர் ரவி, தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா ரவி(எ) பொன்பாண்டி, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அந்தோணி தனுஷ்பாலன், ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா, மற்றும் அரசுத்துறை அலுவலாகள் உட்பட பலா உடனிருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com