தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா: அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்


தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா: அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
x
தினத்தந்தி 12 Dec 2025 9:36 PM IST (Updated: 12 Dec 2025 10:52 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்த நாளையொட்டி தெய்வீக தென்றல் ரஜினிகாந்த் நற்பனி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி சண்முகபுரத்தில் நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்த நாளையொட்டி தெய்வீக தென்றல் ரஜினிகாந்த் நற்பனி மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மன்ற நிர்வாகி ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தையல் மிஷின் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், வட்டச்செயலாளர்கள் பொன்ராஜ், சுரேஷ் மகாராஜா, கவுன்சிலர் பாப்பாத்தி, முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங், பகுதி இளஞைர் அணி அமைப்பாளர் சூர்யா, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், ஜெபக்குமார் ரவி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், ரஜினி மன்ற நிர்வாகி விஜயஆனந்த், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story