மத்திய மந்திரி அமித்ஷாவிற்கு ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து

திறம்பட மக்கள் பணி செய்து வரும் அமித்ஷாவிற்கு வாழ்த்து தெரிவிப்பதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;-
“கடின உழைப்பு, சிறந்த தலைமை பண்பு, நிர்வாக திறன் கொண்ட பா.ஜ.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவராக திறம்பட மக்கள் பணி செய்தும், இந்தியாவின் பாதுகாப்பு, வளர்ச்சி உள்ளிட்டவற்றில் அர்ப்பணிப்புடன் பணிகளை மேற்கொண்டும், பொது சேவைகளை செய்து வரும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் பிறந்த நாளில் நீண்ட ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ உள்ளம் நிறைந்த மகிழ்வோடு வாழ்த்துகிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






