ராமநாதபுரம்: கார் - வேன் மோதி விபத்து - சிறுமி உள்பட 2 பேர் பலி

கோப்புப்படம்
அடுத்தமாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஐடி ஊழியர் வெங்கடேஷ் விபத்தில் உயிரிழந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் சுற்றுலா வேன் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த வேனில் 10-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அதே சாலையில் ஐடி ஊழியர் வெங்கடேஷ் என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கார் மற்றும் சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 13 வயது சிறுமி மகாலட்சுமி மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வேனில் பயணித்த 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனையடுத்து விபத்தில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அடுத்தமாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஐடி ஊழியர் வெங்கடேஷ் விபத்தில் உயிரிழந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






