100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்: திமுக - கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை நிறுத்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.
சென்னை,
100 நாள் வேலை திட்டத்தை சட்டத்தை திரும்ப அரசை சுண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை மேடவாக்கத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய தேசிய முஸ்லிம் லீக் காதர் காதர் மொகைதீன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் செயலாளர் அருணாசலம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பேரவை சுப.வீரபாண்டியன் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டு 100 நாள் வேலை நிறுத்த திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் எம். பி.க்கள் தமிழச்சி தங்க பாண்டியன், கனிமொழி சோமு, துணை மேயர் மகேஷ்குமார், எம்.எல்.ஏ.க் கள் தாயகம் கவி, பிரபா கர்ராஜா, காரம்பாக்கம் கணபதி, அரவிந்த்ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






