விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்; பழவேற்காடு மீனவர்கள் 2-ந்தேதி மீன்பிடிக்க தடை


விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள்; பழவேற்காடு மீனவர்கள் 2-ந்தேதி மீன்பிடிக்க தடை
x

பழவேற்காடு மீனவர்கள் 2-ந்தேதி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ‘எல்.வி.எம்-3' என்ற ராக்கெட் மூலம் ஜிசாட்-7 என்று அழைக்கப்படும் சி.எம்.எஸ்-03 செயற்கைக்கோளை வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.26 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.

இதற்கான இறுதிகட்டப்பணியான ‘கவுண்ட்டவுன்’ 1-ந்தேதி மாலை 5.26 மணி அளவில் தொடங்க இருக்கிறது. இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதையொட்டி ஸ்ரீஹரிகோட்டா அருகில் உள்ள பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வருகிற 2-ந்தேதி கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பார்வையிடுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர்கள் மாடம் கட்டப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து எல்.வி.எம்.3 ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்https://lvg.shar.gov.inஎன்ற இணையதள முகவரிக்கு சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

1 More update

Next Story