குமரியில் இருசக்கர வாகனம் மீது பள்ளி பேருந்து மோதி விபத்து - 2 இளைஞர்கள் உயிரிழப்பு

பள்ளி பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
குமரி,
குமரி மாவட்டத்தை சேர்ந்த அஜேஸ் மற்றும் அர்ஷத்அலி ஆகிய இருவரும் ஓட்டல் மானேஜ்மெண்ட் படிப்பை முடித்த நிலையில், இன்று அவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று சான்றிதழை வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் வெள்ளமோடி பகுதி அருகே வந்தபோது, இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக பள்ளி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களுக்கு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படிப்பை முடித்துவிட்டு சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story






