கடலூரில் பள்ளி வேன் விபத்து: ரெயில் சேவையில் மாற்றம்


கடலூரில் பள்ளி வேன் விபத்து: ரெயில் சேவையில் மாற்றம்
x

பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தை அடுத்து, அவ்வழித்தடத்தில் 3 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

கடலூரில் தனியார் பள்ளி வேன் இன்று (ஜூலை.8) காலை 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. வேனை கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் (47) ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் காலை சுமார் 8 மணி அளவில் வேன் கடலூர் அருகே செம்மகுப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது எதிரே வந்த விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரெயில் எதிர்பாராத விதமாக பள்ளி வேனில் மோதியது.

மோதிய வேகத்தில் பள்ளி வேன் நசுங்கி கவிழ்ந்தது. இதில் தொண்டமாநத்தம் பகுதியைச் சேர்ந்த நிமலேஷ் (12), சின்ன காட்டுசாகையை சேர்ந்த சாருமதி (16) ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்..

படுகாயம் அடைந்த சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன்( 15), தொண்டமாநத்தத்தை சேர்ந்த விஷ்வேஸ் ( 16), வேன் ஓட்டுநர் சங்கர்(47) ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில், சின்னகாட்டுசாகையை சேர்ந்த செழியன் ( 15) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தை அடுத்து,

விபத்து நடந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடையாததால் அவ்வழித்தடத்தில் 3 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* திருவாரூர் - மயிலாடுதுறை பயணிகள் ரெயில் ஆலப்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்.

* மைசூர் - கடலூர் போர்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் புதுச்சத்திரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

* தாம்பரம் - திருச்சி ரெயில் சிதம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



1 More update

Next Story