திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்

பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்திய நாட்களில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வழக்கத்துக்கு மாறாக திடீரென இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் சுமார் 70 அடி தூரம் கடல் உள்வாங்கியது.
ஆனாலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி பாறையில் நடந்து சென்று ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். மேலும் பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story






