ரெயிலில் கஞ்சா சாக்லெட் விற்பனை: திருப்பூரில் பீகார் வாலிபர் கைது

திருப்பூர் ரெயில் நிலையத்தில் மாநகர மதுவிலக்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் ரெயில் நிலையத்தில் மாநகர மதுவிலக்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற வடமாநில வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சோ்ந்த ரூபேஷ் குமார் மண்டல்(வயது 27) என்பதும், அவரிடம் 4 கிலோ 500 கிராம் கஞ்சா சாக்லெட் இருப்பதும் தெரியவந்தது.
வீரபாண்டி பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரூபேஷ் குமார் மண்டலை கைது செய்து கஞ்சா சாக்லெட்டையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story






