டெல்லி செல்லும் செங்கோட்டையன்? காரணம் என்ன? - அவரே அளித்த பதில்


டெல்லி செல்லும் செங்கோட்டையன்? காரணம் என்ன? - அவரே அளித்த பதில்
x
தினத்தந்தி 8 Sept 2025 9:01 AM IST (Updated: 8 Sept 2025 9:21 AM IST)
t-max-icont-min-icon

நாளை முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிட போவதில்லை என செங்கோட்டையன் கூறினார்.

கோவை,

அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில், அவர் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக கோவை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

”நான் கோயிலுக்குச் செல்கிறேன். மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன். கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க வேண்டி கோயிலுக்கு போகிறேன். ராமரை வணங்கிவிட்டு வர வேண்டியதுதான். அனைவரும் ஒன்றாக வேண்டும், கட்சி வளர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். நல்லதுக்காக சொல்கிறோம். அதற்கு பொதுச்செயலாளர் பல்வேறு முடிவுகளை எடுக்கிறார். முடிவுகள் குறித்து கருத்துகள் சொல்ல இயலாது. காலம்தான் பதில் சொல்லும்.

எனது பயணத்தில் பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்கப்போவது இல்லை, நாளை முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிட போவதில்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story