த.வெ.க.வில் செங்கோட்டையன்: கனிமொழி எம்.பி. கருத்து


த.வெ.க.வில் செங்கோட்டையன்: கனிமொழி எம்.பி. கருத்து
x

தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக மழைநீர் தேங்கிய பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுடலையாபுரம், மாதாநகர், ராஜபாளையம், பூபாண்டிபுரம் ஆகிய பகுதிகளில் கனமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி.யிடம் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது குறித்து கேட்டபோது, "அவர் எங்கள் கட்சியில் இருந்து போய் சேரவில்லை. நீங்கள் இந்த கேள்வியை எங்கிருந்து அவர் போனாரோ அங்கு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவர் எங்கு போய் இருக்கிறாரோ அங்கு கேட்க வேண்டும். என்னை கேட்டால்..." என்று கூறினார்.

1 More update

Next Story