த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையனுக்கு எந்த செல்வாக்கும் இல்லை - அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி


த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையனுக்கு எந்த செல்வாக்கும் இல்லை - அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
x

எம்.ஜி.ஆர்., 30 ஆண்டுகளாக தி.மு.க.வில் இருந்தார். வெற்றி பெற்றார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.

மதுரை,

அமைச்சர் கண்ணப்பன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கே: நீங்கள் ஏற்கனவே மூத்த தலைவராக உள்ளீர்கள். இன்றைக்கு அ.தி. மு.க. கட்சியில் இருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன் த.வெ.க. கட்சியில் சேர்ந்துள்ளாரே?

ப: செங்கோட்டையனுக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது? எந்த செல்வாக்கும் இல்லை.

கே: தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தான் தமிழகத்தை ஆளவேண்டுமா, புதிய கட்சிகள் ஆள்வது குறித்து.

ப: மீண்டும் 2026 தேர்தலில் தி.மு.க. ஆட்சிதான் மலரும்.

கே: செங்கோட்டையன் விஜய் கட்சிக்கு சென்றது பலமா இருக்குமா?

ப: விஜய் வெளியில வர மாட்டேன் என்கிறார். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆகமுடியாது. எம்.ஜி.ஆர்., 30 ஆண்டுகளாக தி.மு.க.வில் இருந்தார். வெற்றி பெற்றார். நடிகர் என்றால் எல்லோரும் பார்க்க வரத்தான் செய்வார்கள்.

செங்கோட்டையன் மாற்று கட்சிக்கு சென்றது அவர்கள் கட்சிக்குள் நடக்கும் பிரச்சினை. அதனால் தி.மு.க.தான் இன்னும் பலப்படும். தமிழகத்தை பொறுத்தவரை புதிதாக வேறு கட்சிகள் எதற்கு வரவேண்டும். தி.மு.க. தொகுதி மக்களுக்கு என்ன செய்யவில்லை? தொகுதி மக்கள் வந்து ஒட்டு போடவேண்டும். நாங்க நல்லது தான் செய்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story