எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றால் செங்கோட்டையனுக்கு டெபாசிட் கூட கிடைக்காது - திருப்பூரில் புகழேந்தி பரபரப்பு பேட்டி


எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றால் செங்கோட்டையனுக்கு டெபாசிட் கூட கிடைக்காது - திருப்பூரில் புகழேந்தி பரபரப்பு பேட்டி
x

ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் செங்கோட்டையன் என புகழேந்தி பேசி உள்ளார்.

திருப்பூர்

திருப்பூரில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நம்ம சூப்பர் ஸ்டார் கூலி படம் காலையில் ரிலீஸ் ஆனது போல நம்ம செங்கோட்டையன் விஷயம் ஒரே பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. எல்லாப்பக்கமும் அது தான் பேச்சு. அண்ணனை பற்றி வரும் செய்தி எல்லாம மகிழ்ச்சி தான். நாளை காலை 9 மணிக்கு இது குறித்து பேசுவதாக கூறியிருக்கிறார். ஆனால் நாளைக்கு காலையில் புஸ்வானம் ஆகிவிடக்கூடாது. போலியான போடிங் பாஸ்சை காண்பித்து அவர் டெல்லிக்கு போனார்.

நிதி அமைச்சரை பார்த்தார். அப்படி என்று பழைய நிதி அமைச்சர் புகைப்படத்தை போட்டு அவர் அப்போது பார்த்த போட்டோவை போட்டு பயங்கரமா பண்ணினார்கள். பின்னர் சில நாட்கள் களித்து செங்கோட்டையன் சரண் அடைந்து விட்டார். கட்சி கட்டுபாடு முக்கியம் என எடப்பாடியிடன் சரண் அடைந்தார். நடந்ததா இல்லையா அந்த பிரச்சினை ஏன் வந்தது. அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் தலைவர் மற்றும் அம்மா படத்தை புறக்கணித்ததால் வந்தது.

ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் செங்கோட்டையன். செங்கோட்டையன் பின்னால் பழனிசாமி நடந்து வர மாட்டார் ஓடி தான் வருவார். தமிழகமே எதிர்பார்க்கிறது நீங்கள் எதாவது செய்யப்போகிறீர்கள் என்று ஆனால் இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைகிறது என்று ஒரு அசிங்கத்தை பன்னிவிடாதீர்கள்.

நாளை காலை செங்கோட்டையன் என்ன சொல்ல போகிறார் என்று நான் சொல்லட்டுமா. எனக்கு கட்சி கட்டுப்பாடு ரொம்ப முக்கியம் , ஒற்றுமை வேண்டும் கட்சியில், எல்லாரும் இணைந்து போனால் வெற்றி அடையலாம், ஆகவே மணம் திறந்து சொல்கிறேன். எல்லாரும் இணையனும் என்று கூறி ஊத்தி முழுகும் வேலை எல்லாம் பண்ணாதீங்க.

எப்படியாவது இத கடந்து போகனும் என்று நினைச்சிங்கனா மீடியா உங்களுக்கு மரியாதை கொடுக்காது. மக்களிடமும் மரியாதை எதிர்பார்க்க முடியாது. 7 முறை வெற்றி பெற்ற நீங்கள் பழனிசாமி தலைமை ஏற்று போனால் டெபாசிட் காலி ஆய்டும். கோபி செட்டி பாளயத்தில் 7 முறை வெற்றி பெற்ற நீங்கள் பழனிசாமி தலைமையை ஏற்றால் உங்கள் ஆதரவாளர்கள் கூட உங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.

தலைவர்கள் மற்றும் அம்மாவை அசிங்கப்படுத்துபவர்களை வேடிக்கைப்பார்ப்பவர் செங்கோட்டையன் என்றால் அதை நானும் ஏற்றுக்கொள்ள மாட்டேன், மக்களும் எற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story