பாலியல் வழக்கு; கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு


பாலியல் வழக்கு; கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
x

கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

சென்னை,

சென்னை அண்ணாநகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர் தனியார் பள்ளியில் பணியாற்றியபோது, பாலியல் தொல்லை செய்ததாக மாணவி ஒருவர் புகார் அளித்ததன் பேரில் கடந்த 2021-ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக மேலும் சில மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் என தெரிவித்தனர்.

இதனையடுத்து, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானது. இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் நேற்று முன்தினம் (ஆகஸ்டு 11) தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரம் நேற்று அறிவிக்கப்பட இருந்தது. இந்நிலையில், தண்டனை அறிவிப்பை ஒத்திவைத்தது. இதன்படி, அவருக்கான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

1 More update

Next Story