மயங்கி விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவி.. சாப்பிட்ட சிக்கன் ரைஸ் காரணமா..?

சிக்கன்ரைஸ் சாப்பிட்ட இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயங்கி விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவி.. சாப்பிட்ட சிக்கன் ரைஸ் காரணமா..?
Published on

மதுரை திருமங்கலம் அருகே உள்ள பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பாண்டிச் செல்வி (வயது 24). பட்டதாரி. தற்போது திருமங்கலம் அண்ணா நகர் பகுதியில் கருப்பையா குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

பாண்டிச்செல்வி நேற்று மதியம் விருதுநகர் ரோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் சிக்கன்ரைஸ் சாப்பிட்டுள்ளார்.

சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com