தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும்- மா.சுப்பிரமணியன்

சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
சித்த மருத்துவ பல் கலைக்கழகம் அமைப்பதற்கு கவர்னர் ஒப்புதல் தராமல் இருந்தார். பிறகு சட்டமன்றத்தில் அந்த மசோதா திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது சட்டபூர்வமான ஆய்வுகள் நிறைவடைந்து வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பல்கலைக் கழகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்து தயாராக உள்ளது.சித்த பல்கலைக்கழக மசோதா சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றிய பிறகு சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் பெற்று நிச்சயம் தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






