தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணியில் குளறுபடி: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

எஸ்.ஐ.ஆர். பணிகள் சுணக்கமாக நடைபெறுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
சேலம் ,
சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது,
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சரித்திர சாதனை வெற்றி பெற்றுள்ளது.பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பதிலடியை பொதுமக்கள் கொடுத்துள்ளனர். பீகார் தேர்தல் வெற்றி பாஜக கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதி செய்துள்ளது .
எஸ்.ஐ.ஆர். முறைகேடுகள் என கூறப்பட்ட பொய்களையும் தாண்டி பீகாரில் சிரத்திர வெற்றிப் பெற்றுள்ளது.எஸ்.ஐ.ஆர். படிவத்தில் எந்த குழப்பமும் இல்லை. 5 நாட்களில் பூத் சிலிப் கொடுக்கும்போது ஒரே மாதத்தில் படிவங்களை ஏன் விநியோகிக்க முடியாது. எஸ்.ஐ.ஆர்.பணிகளில் குளறுபடி நடைபெறுகிறது. எஸ்.ஐ.ஆர். பணிகள் முறையாக நடைபெறக்கூடாது என அதிகாரிகள் சிலர் செயல்படுகின்றனர் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்.பணியில் தகுதியான அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை. எஸ்.ஐ.ஆர். பணிகள் சுணக்கமாக நடைபெறுகிறது என தெரிவித்தார்.






