அடுக்குமொழியில் பேச விஜய்க்கு யாரோ சொல்லித் தந்திருக்கிறார்கள் - திருமாவளவன்


அடுக்குமொழியில் பேச விஜய்க்கு யாரோ சொல்லித் தந்திருக்கிறார்கள் - திருமாவளவன்
x
தினத்தந்தி 18 Dec 2025 4:59 PM IST (Updated: 18 Dec 2025 5:00 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தலைமை செயலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், தவெக தொண்டர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய விஜய், திமுகவை தீய சக்தி என்றும், தவெக தூய சக்தி என்றும் பேசினார். மேலும், களத்தில் இல்லாதவர்களை எதிர்ப்பதற்கான ஐடியாவே இல்லை என்றும், எங்கள் எதிரியை சொல்லிவிட்டுத்தான் களத்திற்கு வந்துள்ளோம் எனவும் பேசினார்.

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"டெல்லியில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு அங்கேயே தங்கும் விடுதி ஏற்படுத்தி தர முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். கொசு ஒழிப்பு பணியாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைக்குரிய மனுவையும் முதல்வரிடம் கொடுத்திருக்கிறோம். அதேபோல, மின்சார வாரியத்தில் அப்ரண்டிசாக வேலை பார்ப்பவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை அடங்கிய மனுவையும் முதல்வரிடம் வழங்கியுள்ளோம். என்றார்.

அப்போது விஜய்யின் பேச்சு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “தவெக தலைவர் விஜய்க்கு, தூய சக்தி, தீய சக்தி என்று அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லித் தந்திருக்கிறார்கள். மக்கள் முடிவுசெய்வார்கள்.” என்று பதிலளித்தார்.

1 More update

Next Story