ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு திட்டம் - சென்னை எழும்பூரில் விரைவில் அமல்


ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு திட்டம் - சென்னை எழும்பூரில் விரைவில் அமல்
x

‘யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார்.

சென்னை,

பண்டிகை காலங்கள், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ரெயில் நிலையங்களில் அதிக கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ‘யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார்.

இந்த திட்டத்தின்படி, முன்பதிவு டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு ரெயில் நிலையங்களில் பிரத்யேக நுழைவு வாயில்கள், முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு பிரத்யேக காத்திருப்பு அறை மற்றும் நடைமேடைகளை எளிதில் அணுகிட போதிய வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.

மேலும் தேவையான இடங்களில் நடைமேம்பாலம், சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டம் நாட்டில் முதல் முறையாக டெல்லியில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் 76 ரெயில் நிலையங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அந்த பட்டியலில் சென்னை எழும்பூர் நிலையமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story