நெல்லை - சென்னை இடையே 22-ம் தேதி சிறப்பு ரெயில்


நெல்லை - சென்னை இடையே  22-ம் தேதி  சிறப்பு ரெயில்
x
தினத்தந்தி 20 Oct 2025 11:26 AM IST (Updated: 20 Oct 2025 11:28 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற பயணிகள் திரும்பி வர ஏதுவாக நெல்லையிலிருந்து வரும் 22 ஆம் தேதி சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. நெல்லையிலிருந்து வரும் 22 ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை வந்து சேரும்.

கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக இந்த ரெயில் எழும்பூருக்கு வந்தடையும்.மறுமார்க்கமாக வியாழக்கிழமை பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு, நெல்லைக்கு நள்ளிரவு 12.15 மணிக்கு சென்றடையும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

1 More update

Next Story