போத்தனூர்- சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரெயில்

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
கோவை,
சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை- போத்தனூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது:-
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 14-ந் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல்- போத்தனூர் சிறப்பு ரெயில் (வண்டி எண்:- 06027) மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் போத்தனூரில் இருந்து 17-ந் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும் போத்தனூர்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரெயில் (எண்:- 06028) மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில்நிலையத்துக்கு சென்றடையும். இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






