தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி: கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள் என்னென்ன..?

தமிழ்நாடு, உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி 4-ந்தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி: கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள் என்னென்ன..?
Published on

சென்னை,

பீகாரில் எஸ்.ஐ.ஆர். நடத்தப்பட்டதன் மூலம் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். அதில் 35 லட்சம் பேர் பீகாரை விட்டு வெளியேறியவர்கள். 22 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள். 7 லட்சம் பேர் 2 இடங்களில் பட்டியலில் பெயர் இருந்தவர்கள். ஒரு லட்சம் பேரை அடையாளம் காண முடியவில்லை என்று தேர்தல் கமிஷன் கூறியது. அதில் இடமாற்றம் செய்ததாக சொல்லி நீக்கப்பட்ட 35 லட்சம் பேர் விவகாரத்தில் நாடு முழுவதும் பெரும் பிரச்சினை கிளம்பியது.

இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) 4-ந்தேதி தொடங்குவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். தொடங்குவதால் 6 முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டி உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

* வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் பெயர்கள் முழுமையாக நீக்கப்படும்.

* 2 தொகுதிகளில் பெயர் இருந்தால், அதில் ஒரு தொகுதியின் பெயர் நீக்கப்படும்.

* ஒரு வாக்காளர் எங்கு குடியிருக்கிறாரோ, அந்த சட்டசபை தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில்தான் அவரது பெயர் இருக்க வேண்டும். மாறாக சொந்த ஊரில், அவரது பெயர் இருந்தால் அது நீக்கப்படும். எனவே சென்னை உள்பட நகரங்களில் வசிப்பவர்கள் தங்களது பெயரை சொந்த ஊரில் இருந்து நீக்கி வசிக்கும் இடத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நிலை உருவாகும்.

* வேறு தொகுதி அல்லது வேறு மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்து கொள்ளவேண்டும்.

* தமிழகத்தில் வேலை பார்க்கும் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

* பீகார், வங்காளதேசம் எல்லையை ஒட்டி இருப்பதால் ஏராளமான வங்காளதேசத்தினர் வாக்காளர் பட்டியலில் இருந்தனர். அவர்கள் பெயர்கள் எஸ்.ஐ.ஆர். மூலம் தற்போது நீக்கப்பட்டு உள்ளது. அதேபோல தமிழகத்தில் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தவர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்ந்து இருந்தால் நீக்கப்படுவார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com