புயல் பாதிப்பு: சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை வரை மூடல்


புயல் பாதிப்பு: சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை வரை மூடல்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 30 Nov 2024 5:55 PM IST (Updated: 30 Nov 2024 6:00 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக சென்னையில் 55விமானங்கள் ரத்துசெய்யப்பட்டு உள்ளன.

விமான ஓடுபாதையில் தேங்கிய மழையால் விமானங்களை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது. அதேபோல, மோசமான வானிலை காரணமாக சென்னைக்கு வர வேண்டிய 19 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டு உள்ளன.

முன்னதாக விமானங்களின் சேவை இரவு 7.30 மணி வரை ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. விமான நிலையம் மூடப்படுவதால் உள்ளூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ள பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.


Next Story