புயல் எதிரொலி- ஜனாதிபதி திரவுபதி முர்முவின் திருவாரூர் பயணம் ரத்து


புயல் எதிரொலி- ஜனாதிபதி திரவுபதி முர்முவின் திருவாரூர் பயணம் ரத்து
x

மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க திட்டமிடப்பட்டு இருந்தது.

விழாவையொட்டி ஜனாதிபதி நாளை ஊட்டியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதாக இருந்தார். இதற்கிடையே, வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல், நாளை பிற்பகலில் காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story