சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இருமடங்காக அதிகரிப்பு

கோடை விடுமுறைக்குப்பின் தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. 36 நாட்கள் கோடை விடுமுறைக்குப்பின் தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் காலையிலேயே பள்ளிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், நடப்பு ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ-மாணவியர் சேர்க்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 6 ஆயிரம் மாணவ-மாணவியர் புதிதாக சேர்ந்தனர். ஆனால், நடப்பு கல்வியாண்டில் இதுவரை 16 ஆயிரத்து 490 மாணவ-மாணவியர் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவியர் சேர்க்கை வெகுவாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






