மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ் ஏட்டு அதிரடி கைது


மாணவிக்கு பாலியல் தொல்லை: போலீஸ் ஏட்டு அதிரடி கைது
x

கோப்புப்படம்

நெல்லையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர ஆயுதப்படையில் தலைமை காவலராக (ஏட்டு) பணியாற்றி வந்தவர் சசிகுமார் (45 வயது). 2002-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாக குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் பாளையங்கோட்டை அருகே ஒரு பகுதியில் வசித்துவரும் பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அந்த பெண்ணின் 14 வயது மகளுக்கு சசிகுமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 9-ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி இந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் இதுகுறித்து போலீசாரிடம் தெரிவிக்கவில்லையாம். உடனே மாணவி, சக மாணவிகளின் உதவியுடன் ஒன் ஸ்டாப் சென்டர் குழந்தைகள் காப்பகம் எண்ணை தொடர்பு கொண்டு புகார் கொடுத்தார்.

உடனடியாக குழந்தைகள் நலத்துறை சார்பில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் இரவில் கைது செய்தனர். சசிகுமாரின் சொந்த ஊர் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story