மதுரை - பெங்களூரு இடையே கோடைகால சிறப்பு ரெயில் இயக்கம்

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
மதுரை
கோடை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க, மதுரை - பெங்களூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
பெங்களூரு - மதுரை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06521) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்வருகிற ஏப்ரல் 30 தேதி இயக்கப்படும். இந்த ரெயில் பெங்களூரில் இருந்து (புதன்கிழமை) இரவு 7 மணியில் புறப்படும்.
மறுமார்க்கத்தில் மதுரை - பெங்களூரு செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 06522) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் வருகிற மே 1ம் தேதி இயக்கப்படும். இந்த ரெயில் மதுரையில் இருந்து (வியாழக்கிழமை) இரவு 7.50 மணியில் புறப்படும்.
ரெயில் பெட்டி அமைப்பு: 2- ஏசி இரண்டு அடுக்கு பெட்டிகள், 16- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், மற்றும் 2- லக்கேஜ் கம் பிரேக் வேன் உள்ளன.
Related Tags :
Next Story






