தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதியளவு ரத்து


தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதியளவு ரத்து
x

கோப்புப்படம்

ஒலக்கூர் - திண்டிவனம் இடையே பராமரிப்பு பணி நடப்பதால் ரெயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம்,

தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரெயில் இன்று மேல்மருவத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலக்கூர் - திண்டிவனம் இடையே பராமரிப்பு பணி நடப்பதால் தாம்பரத்தில் இருந்து விழுப்புரத்திற்கு 9.45 மணிக்கு புறப்படும் ரெயில் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில் விழுப்புரத்துக்கு பதில் மேல்மருவத்தூரில் இருந்து இன்று பிற்பகல் 1.40 மணிக்கு இந்த ரெயில் சென்னை புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story