பட்ஜெட் உரையை 2 மணி நேரம் 38 நிமிடம் வரை வாசித்த தங்கம் தென்னரசு


பட்ஜெட் உரையை 2 மணி நேரம் 38 நிமிடம் வரை வாசித்த தங்கம் தென்னரசு
x
தினத்தந்தி 14 March 2025 12:39 PM IST (Updated: 14 March 2025 12:43 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு 2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சரியாக, காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மு.அப்பாவு திருக்குறள் வாசிக்க கூட்டம் தொடங்கியது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து ரூ.1000 கோடி மதுபான ஊழல் தொடர்பாக பேச முயன்றனர். சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில், 9.32 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையை தொடங்கினார்.ஆனாலும், அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேச வாய்ப்பு கேட்டுக்கொண்டே இருந்தனர். இதனால், சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து பேச அ.தி.மு.க.வுக்கு வாய்ப்பு தரப்படாததால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால், சட்டசபையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து எதிர்கட்சிகளின் அமளிக்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை காலை 9.32 மணிக்கு தொடங்கி மதியம் 12.10 மணிக்கு உரையை நிறைவு செய்தார். பட்ஜெட் உரையை 2 மணி நேரம் 38 நிமிடம் வரை அவர் வாசித்தார்.

உரையின் முடிவில், நூற்றாண்டு கண்ட இந்த சட்டமன்றப் பேரவையின் மகத்தான தலைவர்களுள் ஒருவராக வரலாற்றில் இடம்பெறவிருக்கும் நமது முதல்-அமைச்சர் அவர்களின் தலைமையில், எல்லோருக்கும் எல்லாம் என்பதை உறுதி செய்திடும் வகையில், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளம் அமைத்திட நாம் இருமடங்கு உழைத்திடுவோம். இந்த வரவு-செலவுத் திட்டத்தினைச் செதுக்கிடத் தேவையான L160 ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் நல்கிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு மீண்டும் எனது மனம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன் என்று உரையை நிறைவு செய்தார்.


Next Story