2வது நாளாக நடைபெற உள்ள தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு: போக்குவரத்து மாற்றம்


2வது நாளாக நடைபெற உள்ள தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு: போக்குவரத்து மாற்றம்
x

விஜய் கூட்ட நெரிசலில் சிக்காமல் நிகழ்ச்சி அரங்கிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்

கோவை,

த.வெ.க.வின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் கோவையில் நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் நேற்று கோவை சென்றார். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக விஜய், கோவை-அவினாசி ரோடு லீமெரிடியன் ஓட்டலில் தங்கி உள்ளார்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தங்கியுள்ள நட்சத்திர விடுதி முன்பு தொண்டர்கள் குவிந்துள்ளனர். வாகனங்கள் வெளியே செல்லும் வழியில் நின்று இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என விடுதி ஊழியர்களும் காவல்துறையினரும் அறிவுரை வழங்கி உள்ளனர். இருப்பினும் வழி விடாமல் TVK..TVK..TVK.. என தொண்டர்கள் முழக்கமிட்டு வருவதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

இதனிடையே கோவையில் 2ம் நாளாக நடைபெறும் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் 8,000 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஸ் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

தொண்டர்களை ஒழுங்குபடுத்தி உள்ளே பவுன்சர்கள் அனுமதித்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய் வரும்போது கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் பேரி கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்காமல் நிகழ்ச்சி அரங்கிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி விஜய் வரக்கூடிய சாலையில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story