சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது - செல்வப்பெருந்தகை


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது - செல்வப்பெருந்தகை
x
தினத்தந்தி 8 April 2025 1:57 PM IST (Updated: 8 April 2025 2:18 PM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது - செல்வப்பெருந்தகை

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"தமிழ்நாடு அரசு, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கிடப்பில் போட்டு, வேண்டுமென்றே காலம் தாழ்த்திய கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அறிவுரை வழங்கியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்றும் நியமனப் பொறுப்பில் உள்ளவருக்கு குறிப்பிட்ட அதிகாரம்தான் உள்ளது என்றும் கூறிவந்ததை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது

அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம். இதன்மூலம் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கவர்னரின் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து, சுப்ரீம் கோர்ட்டின் தெளிவான தீர்ப்பு வந்துள்ளது. இந்த தீர்ப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story