பகலிலேயே உல்லாசத்திற்கு அழைப்பு.. மறுப்பு தெரிவித்த கொழுந்தியாள்... தர்மபுரியை பரபரப்பாக்கிய காண்டிராக்டர் கள்ளக்காதல்


பகலிலேயே உல்லாசத்திற்கு அழைப்பு.. மறுப்பு தெரிவித்த கொழுந்தியாள்... தர்மபுரியை பரபரப்பாக்கிய காண்டிராக்டர் கள்ளக்காதல்
x

அனுமந்தன் கூறியபடி அதே பகுதியில் உள்ள கல்லு கொல்லை மேடு என்ற இடத்துக்கு ராஜேஸ்வரி சென்றார்.

தர்மபுரி,

தர்மபுரி அருகே உள்ள இண்டூர் ஒசஹள்ளி புதூரை சேர்ந்தவர் பிரபு (வயது 35). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (30). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பிரபு பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகிறார். ராஜேஸ்வரி மட்டும் ஊரில் தங்கி பிள்ளைகளை படிக்க வைத்து வந்துள்ளார். ஒசஹள்ளி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தன் (40). கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி முனியம்மாள். இவரது தங்கை தான் ராஜேஸ்வரி.

இந்தநிலையில் ராஜேஸ்வரிக்கும் அவரது அக்காள் கணவரான அனுமந்தன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் தங்கி வேலை செய்து வரும் பிரபு மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதுபோன்று ஊருக்கும் வரும் நேரங்களில் 10 நாட்கள் வரையில் அவர் தங்கி இருப்பது வழக்கம். இந்த 10 நாட்களில் ராஜேஸ்வரியும் அனுமந்தனும் சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளனர். அதே நேரத்தில் பிரபு பெங்களூருக்கு வேலை சென்றதும் தங்களது கள்ளக்காதலை தொடர்ந்து உள்ளனர். இது அக்கம் பக்கதினருக்கு அரசல் புரசலாக தெரியவந்துள்ளது. இருப்பினும் யாருக்கும் தெரியாமல் அனுமந்தனும் ராஜேஸ்வரியும் அடிக்கடி சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்திருக்கிறார்கள். பிரபு ஊரில் இல்லாத நேரத்தில் அனுமந்தனும் ரஜேஸ்வரியும் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதற்கிடையே பெங்களூரில் தங்கி வேலை செய்து வரும் பிரபு ஊருக்கு வருவதற்கு திட்டமிட்டு இருந்தார். இது அனுமந்தனுக்கு தெரிய வந்ததும் ராஜேஸ்வரியை செல்போனில் அழைத்து பேசி உள்ளார். பிரபு ஊருக்கு வருகிறான். அவன் 10 நாட்கள் ஊரில் இருந்தால் நாம் சந்தித்து பேசி உல்லாசமாக இருக்க முடியாது. எனவே நான் இருக்கும் பகுதிக்கு வா. இருவரும் தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என்று அழைத்துள்ளார். ஆனால் ராஜேஸ்வரியோ எனக்கு நிறைய வேலை இருக்கிறது. பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளது. பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் கட்ட வேண்டும் நீ பகலிலேயே உல்லாசத்திற்கு அழைத்தால் எப்படி என்று கேட்டுள்ளார்.

இதை தொடர்ந்து நேற்று மதியம் தனது வீட்டிலிருந்து ஸ்கூட்டியில் புறப்பட்ட ராஜேஸ்வரி பள்ளிக்கு சென்று பிள்ளைகளுக்கு கல்வி கட்டணத்தை செலுத்தி உள்ளார்.இதன் பிறகு அனுமந்தன் கூறியபடி அதே பகுதியில் உள்ள கல்லு கொல்லை மேடு என்ற இடத்துக்கு ராஜேஸ்வரி சென்றார். அங்கு வைத்து அனுமந்தன் ராஜேஸ்வரியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையே உள்ள பழக்கம் ஊருக்கெல்லாம் தெரிந்துவிட்டது. இனி நாம் பழகுவதை குறைத்து கொள்ளலாம் என்று அவர் அனுமந்தனிடம் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அபோது அனுமந்தன் ஓங்கி அடித்துள்ளார். பதிலுக்கு ராஜேஸ்வரியும் அனுமந்தனின் சட்டையை பிடித்து இழுத்துள்ளார். இதில் அவரது சட்டை கிழிந்துள்ளது. இதை தொடர்ந்து ஆத்திரம் தலைக்கு ஏறிய நிலையில் உல்லாசத்திற்கு அழைத்தால் வரமாட்டாயா? என அனுமந்தன் ராஜேஸ்வரியை கண்மூடித்தனமாக தாக்கி கல்லாலும் அடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மயங்கிய ராஜேஸ்வரியை அருகில் இருந்த குழியில் தள்ளி கட்டிடக்கழிவுகளை கொண்டு மூடி இருக்கிறார். அனுமந்தன் தாக்கியதில் ஏற்கனவே மயக்க நிலையில் இருந்த ராஜேஸ்வரி குழிக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அனுமந்தன் அந்த பகுதியில் கட்டிட கழிவுகளை விற்பனை செய்யும் காண்ட்ராக்டர் வேலையும் செய்து வந்துள்ளார். கிரிக்கெட் போட்டி நடத்துவதற்காக மேடும் பள்ளமுமாக இருந்த காலி இடத்தை மண்ணை கொட்டி சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது தான் ராஜேஸ்வரிக்கு போன் செய்து அங்கு வரவழைத்துள்ளார்.

அங்கு வைத்து தான் ராஜேஸ்வரிக்கும் அனுமந்தனுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கல்லால் தாக்கியதில் மயங்கி விழுந்த ராஜேஸ்வரியை அங்கிருந்த குழியில் தள்ளி அனுமந்தன் மண்ணை போட்டு மூடி இருக்கிறார். சுற்றிலும் யாரும் இல்லாத நிலையில் அதையே வசதியாக பயன்படுத்தி கொண்டு ராஜேஸ்வரியை புதைத்து இருக்கிறார்.பின்னர் எதுவும் தெரியாதது போல ராஜேஸ்வரியின் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்று அவரது வீட்டில் விட்டுவிட்டு, தனது வீட்டுக்கு சென்று கிழிந்த போன சட்டையையும் மாற்றியுள்ளார்.

அனுமந்தனுக்கும் ராஜேஸ்வரிக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அந்த பகுதியில் இருந்த ஆடு மேய்பவர்கள் அந்த சம்பவத்தை பார்த்துள்ளனர். அவர்கள் தான் இது பற்றி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர். நேற்று மதியம் 2 மணி அளவில் சம்பவம் நடைபெற்ற நிலையில் 3 மணியளவில் போலீசுக்கு தகவல் தெரியவந்துள்ளது.

உடனடியாக இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் யோக பிரகாஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புதைக்கப்பட்டிருந்த ராஜேஸ்வரியும் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கொழுந்தியாளை கொடூரமாக கொலை செய்த அனுமந்தனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ராஜேஸ்வரி புதைக்கப்பட்ட குழியை மூடிய ஜேசிபி டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தால் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

ராஜேஸ்வரியின் கணவரான பிரபுவும், கொலையாளி அனுமந்த்னும் உறவினர்கள் ஆவர். இருவரும் ஒரே வீட்டில் அக்காள், தங்கை இருவரையும் திருமணம் செய்து இருந்தனர்.

இது போன்ற சூழலில் கள்ளக்காதல் விவகாரத்தில் ராஜேஸ்வரியை அனுமந்தன் கொலை செய்துள்ள சம்பவம் தர்மபுரி சுற்றுவாட்டர பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தகாத உறவால் ஏற்பட்ட இந்த கொலை சம்பவத்தால் ராஜேஸ்வரியின் குடும்பத்தினரும் நிலை குலைந்துள்ளனர். எப்போதுமே கள்ளக்காதல் விவகாரம் கடைசியில் கொலையில்தான் முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை ராஜேஸ்வரி - அனுமந்தனின் கள்ளக்காதல் விவகாரம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

1 More update

Next Story