'தமிழிசையின் ஆசை தமிழ்நாட்டில் நிறைவேறாது' - திருமாவளவன்


தமிழிசையின் ஆசை தமிழ்நாட்டில் நிறைவேறாது - திருமாவளவன்
x

தமிழிசை சவுந்தரராஜனின் ஆசை தமிழ்நாட்டில் நிறைவேறாது என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

சென்னை,

டெல்லி சட்டசபை தேர்தலை போல் தமிழ்நாட்டிலும் 'இந்தியா' கூட்டணி பலவீனமாகும் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது;-

"தமிழிசை சவுந்தரராஜனின் ஆசை தமிழ்நாட்டில் நிறைவேறாது என்பதை கடந்த காலமே அவருக்கு உணர்த்தி இருக்கிறது. எதிர்காலமும் அதை உணர்த்தும். திருமாவளவன் வேறு கூட்டணிக்கு சென்று விடுவார் என்று அவர் கூறியிருப்பது அவருடைய கற்பனை.

'இந்தியா' கூட்டணியை அமைப்பதற்கு நாங்களும் எங்களால் முடிந்த பங்களிப்பை செய்திருக்கிறோம். அதே போல் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் எங்கள் பங்களிப்பு மகத்தானது. எனவே, இந்த கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டும் என்பதில்தான் வி.சி.க. உறுதியாக இருக்கிறதே தவிர, வேறு எந்த ஊசலாட்டமும் எங்களிடம் இல்லை."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story