முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
x

கோப்புப்படம் 

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வெற்றி வாய்ப்பு குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

சென்னை

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு, பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலுக்கான பணியை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக தொடங்கி இருக்கிறது.

இந்த நிலையில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த கூட்டத்தில் திமுக மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற பொருளில் நடைபெறும் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

1 More update

Next Story