'தமிழ்நாடு அரசு அனைத்திற்கும் தடை போடுகிறது' - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

மத்திய அரசு என்ன சொன்னாலும் அதை மாநில அரசு எதிர்க்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"தி.மு.க. அரசு விஜய்யின் கட்சிக்கு மட்டுமல்ல, சமீபத்தில் திருவல்லிக்கேணியில் பிரதமர் மோடியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சிக்கு கூட தடை போட்டார்கள். ஏன் என்று கேட்டால், மண்டபத்தில் வைத்து நிகழ்ச்சியை நடத்துங்கள் என்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு அனைத்திற்கும் தடை போடுகிறது. மத்திய அரசு என்ன சொன்னாலும், அதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






