பர்வத மலை ஏறிய பக்தருக்கு நேர்ந்த சோகம்

ஈரோட்டை சேர்ந்த தனசேகரன் காலை மலையேற தொடங்கிய நிலையில் திடீர் வலிப்பு ஏற்பட்டுள்ளது.
பர்வத மலை ஏறிய பக்தருக்கு நேர்ந்த சோகம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே தென்மாதிமங்கலம் பகுதியில் சுமார் 4,560 அடி உயரம் கொண்ட பர்வதமலை மீது மல்லிகார்ஜூனேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு மாத பவுர்ணமி நாட்களிலும் மற்றும் வார விடுமுறை நாட்களிலும் உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில், ஈரோட்டை சேர்ந்த தனசேகரன் பர்வத மலையேற வந்துள்ளார். காலை மலையேற தொடங்கிய நிலையில்; 1265 படிக்கட்டுகள் ஏறி முடித்த போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென தனசேகரன் மயங்கி விழுந்துள்ளார். இது குறித்து மருத்துவகுழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக்குழுவினர் மற்றும் வனத்துறையினர் பரிசோதித்த போது தனசேகரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடலாடி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com