மருத்துவத்துறையில் காலிப்பணியிடமே இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.
மருத்துவத்துறையில் காலிப்பணியிடமே இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை,

சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சுகாதாரத்துறையில் ஒரு காலிப் பணியிடமாவது எங்கேயாவது இருக்கிறதா என்பதை காட்டுங்கள்; ஜீரோ காலிப்பணியிடங்கள் என்ற வகையில் மருத்துவத்துறையில் பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன 1.75 லட்சம் பேர் பணிபுரியும் மருத்துவத்துறையில் காலிப் பணியிடமே இல்லை என்ற நிலை தற்போதுதான் உள்ளது.

மருத்துவத்துறை வரலாற்றிலேயே கலந்தாய்வு நடத்தி வெளிப்படைத் தன்மையோடு பணியிட மாற்றங்கள் கொடுப்பது திமுக அரசு ஆட்சியில்தான். கடந்த ஆட்சிக் காலங்களில் ஊழல், முறைகேடு போன்றவை நடந்தபோது ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஆனால் தற்போது வெளிப்படைத் தன்மையோடு பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது.

அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் முழுநேரம் பணியில் இருக்க அறிவுறுத்தியிருக்கிறோம். மழைத்தொடங்கிய பிறகு ஏதாவது பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மழைக்கான சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் முழு நேரம் மின்சாரம் தடைபடாமல் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மழை பெய்தால் மருத்துவமனையில் தண்ணீர் வரும் என்ற நிலை பெரும்பகுதியான மருத்துவமனைகளில் தற்போது இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஏறத்தாழ 14 ஆயிரம் மருத்துவ கட்டமைப்புகள் இருக்கிறது. அனைத்திலும் பார்த்து பார்த்து முடிந்தவரை மழைக் காலங்களில் மழைநீர் தேக்கம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com